இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அபார ஆரம்பம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டி இங்கிலாந்து, லீட்ஸ் மைதானத்தில் நேற்று(20.06) ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தளது.

முதலில் துடுப்பாடி வரும் இந்தியா அணி மிக அபாரமாக துடுப்பாடி வருகிறது. முதல் நாள் முடிவில் 85 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்ளை இழந்து 359 ஓட்டங்களை பெற்றுள்ளது. தலைமை பொறுப்பை ஏற்று நான்காமிடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் 127 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். கில்லின் அணி தலைமை பொறுப்பு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கில் ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ரிஷாப் பாண்ட் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றுள்ளார். இணைப்பாட்டம் 138 ஓட்டங்கள்.

யஷாஸ்வி ஜய்ஸ்வால் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 42 ஓட்டங்கள். அறிமுகத்தை மேற்கொண்ட சாய் சுதர்சன் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களையும், ப்ரைடன் கேர்ஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

விராத் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் சாய் சுதர்சன், கருண் நாயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லோகேஷ் ராகுல், யஷாஸ்வி ஜய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். மூன்றாமிடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகத்தை மேற்கொண்டார். சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி நீண்ட காலமாக பிடித்து வைத்திருந்த இடத்தை சுப்மன் கில் பெற்றுள்ளார். தொடர்ந்து வரும் இடங்களில் ரிஷாப் பாண்ட், கருண் நாயர், ரவீந்தர் ஜடேஜா, ஷர்டூல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பாக ஷக் க்ரௌலி, பென் டக்கட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், ப்ரய்டன் கார்ஸ், ஜோஷ் டொங், சொஹைப் பஷீர் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Social Share

Leave a Reply