மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக மத்திய கிழக்கு வழியாக பயணம் தடைபட்டுள்ளதாகவும், அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.