விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு ராமகிருஸ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கடந்த (21.06) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.
ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி நீல மாதவானந்தஜீ மஹராஜ் அவர்களது தலைமையில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தஜீ மஹராஜ் அவர்களது ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு விசேட அதிதியாக ஊவாவெல்லஸ பல்கலைக் கழகத்தின் நூலகர் கலாநிதி ரீ.பிரதீபன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் வைத்தியர் சீ.வாமதேவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் குருகுல பழைய மாணவர் சங்க தலைவருமாகிய கே.மதிவண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது யோகா கண் காட்சி நிகழ்த்தப்பட்டதுடன், IUYF ஆசிய சம்பியன் சிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.