காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (23.06) அதிகாலை ஒரு வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காலி பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும்.