CCC கிரிக்கெட் அக்கடமி நடாத்தும் 30 ஓவர்கள் அடங்கிய 12 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான தொடரில் கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்கடமி 89 ஓட்டங்களினால் அபார வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. சனத் ஜசூர்யா கிரிக்கெட் அக்கடமியுடன் இன்று(22.06) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்த வெற்றியை கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்கடமி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சனத் ஜசூர்யா கிரிக்கெட் அக்கடமி களத்தடுப்பை தெரிவு செய்தது. மழை காரணமாக 27 ஓவர்களாக நடாத்தப்பட்ட போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்கடமி 03 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் நொமின் ரித்னுகா ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை 58 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக பெற்றுக்கொண்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரவிக் நிதானமாக துடுப்பாடி 69 பந்துகளில் 32 ஓட்டங்களை 2 பவுண்டரிகளுடன் பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 77 ஓட்டங்களை பகிர்ந்தனர். கணேஷன் தபிஷன் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். நொமின், தபீஷன் ஆகியோர் மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக 48 ஓட்டங்களை பகிர்ந்தார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சனத் ஜசூர்யா கிரிக்கெட் அக்கடமி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களை பெற்றது. இதில் டெனுல நெத்மிக 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். கோல்ட்ஸ் அக்கடமியின் பந்துவீச்சில் MI உஸாம் 3 விக்கெட்ளை கைப்பற்றினார். பினார சத்ஸரா 2 விக்கெட்களை கைப்பற்றினார். தினுக ஜயசிங்க, தருஷ ஜிம்ஹார, நொமின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள் .
இந்த தொடரின் குழு நிலைப் போட்டிகளில் தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் கோல்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.