CCC கிரிக்கெட் பாடசலை இன்று 13 வயதுக்குட்பட்ட தொடரின் முதற் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்டமி வெற்றி பெற்றுள்ளது. பிலியந்தல KGA அக்கடமியுடன் நடைபெற்ற போட்டியில் கோல்ட்ஸ் அணி 03 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள, ஆனந்த சாஸ்திராலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பாடிய KGA அக்கடமி 30 ஓவர்கள் போட்டியில் 27.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை பெற்றது. தேசண்டு செஹாஸ் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றார். கோல்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் நொமின் ரித்னுக 6 ஓவர்கள் பந்துவீசி 8 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். MI உஷாம் 6 ஓவர்களில் 9 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. MI உஷாம் ஆட்டமிழக்காமல் 13ஓட்டங்களை , பிரவிக், நொமின் ஆக்கோயிற் தலா 12 ஓட்டங்களை பெற்றனர். KGA அக்கடமி சார்பில் இஷித்த வெக்ரிய, தமிந்து தேவுனல, பெசந்து மிந்துல ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.