பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவிலான அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், பாரிய சேதங்கள் ஏதும் பதிவாகியில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.