தனஞ்சயவுக்கு நான்காமிடம். சொனாலுக்கு அறிமுகம்.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(25.06) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டியில் அஞ்சலோ மத்தியூஸ் ஓய்வு பெற்று அணியை விட்டு விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சொனால் டினுஷா டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொளளவுள்ளார். ஆனால் நான்காமிடத்தில் களமிறங்கப்போவதில்லை. இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா நான்காமிடத்தில் துடுப்பாடவுள்ளார். இந்த விடயங்களை இன்று மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடு வது தொடர்பில் அணிக்குள் கலந்துரையாடப்பட்டதாகவும், நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் தனஞ்சய மேலும் கூறினார். இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடவுள்ளனர். மிலான் ரத்நாயக்க உபாதையடைந்துள்ள நிலையில், கஸூன் ரஜித நாளைய போட்டியில் விளையாடவுள்ளார். இரண்டு மாற்றங்கள் மட்டுமே அணியில் நடைபெறுமென நம்பலாம். ஏனைய இடங்களில் மாற்றங்கள் நடைபெற சாத்தியக் கூறுகள் குறைவாக காணப்படுகின்றன.

SSS மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகம் தரும் மைதானம். இறுதி நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு என நம்பலாம். இலங்கை அணி இறுதியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரகாசித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதற்போட்டி இலங்கை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இவ்வாறான நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என நிலை காணப்படுகிறது. கொழும்பில் தினமும் காலை வேளையில் மழை பெய்து வரும் போட்டியிலும் ஆடுகளத்திலும் மழை தாக்கம் செலுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

நேற்றைய தினம் இரண்டவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றுவதற்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் டுனித் வெல்லாலகே இணைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தை குறிவைத்து இவர் இணைக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் நாளைய போட்டியில் விளையாடினாள் டுனித் வெல்லாலகே விளையாடும் வாய்ப்புகளுள்ளன.

Social Share

Leave a Reply