இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியன போர் நிறுத்தத்துக்கு தயார் எனவும், எதிர்வரும் சில மணி நேரங்களுக்குள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருமெனவும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை ஈரான் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இஸ்ரேல் தரப்பிலிருந்து பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற 12 நாள் போர் நிறைவுக்கு வரவுள்ளது. ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தியன் மூலமாக ஈரான் நலிவடைந்துள்ள நிலையிலேயே சமாதான பேச்சுவார்த்தைக்கு ஈரான் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.