புதிய எரிவாயுவும் வெடிக்கிறது. யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று (14.12) செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று இன்றைய தினம் காலையில் விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது ,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. அதன்போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அதேவேளை அடுப்பு வெடித்து சிதறிய அதிர்வில் , சமையலறையின் சீலிங் சீட்டும் வெடித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரை நேற்றைய தினமே மாற்றி இருந்ததாக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்

(யாழ் நிருபர்)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version