ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

நாட்டில் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் 50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன நிறுவனம் ஒன்று மொத்த பேருந்துகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மின்னேற்றும் தளங்களை (Charging Points) இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த பேருந்துகள் கையாளுவதற்கு மிகவும் எளிதானவை என்றும் பயணிகள் பயணம் செய்ய சொகுசானவை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கங்கள் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  கடிதம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version