பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்கும் முடிவுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று (26.06) அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தத்தின் கீழ் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த கட்டண திருத்தத்திற்கு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.