தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய தமிழ் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மேற்கூறிய விடயத்தை வெளிப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான், ரஸ்யா- யுக்ரேன், இந்தியா-பாகிஸ்தான் போர் சூழல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் மறந்துவிடுமா அல்லது கவவனிக்கப்படாமல் விடப்படுமா என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், வோக்கர் டக்கிடம் கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கொண்டவர் பதிலளித்தார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பு தொடர்பில் வானொலி ஒன்றுக்கு சாணக்கியன் வழங்கிய குரல் பதிவில் இதனை தெரிவித்தார்.