2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் நம்வாம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென இலங்கை பரீட்சசை திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று(26.05) முதல் ஜூலை 21 ஆம் திகதி வரை பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சசைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. இந்த தினங்களுக்குள் பாடசாலை பரீட்சார்திகள் தங்கள் பாடசாலைகள் மூலமும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனியாகவும் விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.