இஸ்ரேலின் மொஸாட்டுடன் பணியாற்றிய மூன்று ஈரானியர்களுக்கு மரண தண்டனை

இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கடத்தியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரான் இன்று(25.06) மரண தண்டனை விதித்துள்ளதாக நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கடத்திய உபகரணங்கள் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக மிசான் மேலும் விவரங்களைத் வெளியிடாமல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான சமீபத்திய வெளிப்படையான மோதலுக்கு முன்னர் இஸ்ரேலுடன் பல தசாப்தங்களாக நீடித்த நிழல் போரில் சிக்கிய ஈரான், மொசாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டில் மொசாட்டின் நடவடிக்கைகளை எளிதாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பல நபர்களைக் கொன்றுள்ளதாக மேலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply