சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் ஒன்று பெலன்வத்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை காவல் பிரிவின் பெலன்வத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த குறித்த பெண் ஒருவர் நேற்று (27.06) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை காவல் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.