வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திரசேகர மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன் ஆகியோரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் ஆகியோர் இன்று மாலை (02.07.2025) வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மாவட்ட செயலகத்தினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன் புதிய தவிசாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.