வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகரசபை முதல்வர், மற்றும் உப முதல்வர் ஆகியோர் குறித்த பெயர் பலகையை அகற்றியுள்ளனர்.
கண்டி வீதியில் இந்த நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே தடுக்கப்பட்டுள்ளது.