கோல்ட்ஸ் 13 வயதுக்குட்பட்ட அணி காலிறுதியில்

CCC கிரிக்கெட் அக்கடமி நடாத்தும் 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி தொடரில் கோல்ட்ஸ் கிரிக்கெட் அக்கடமி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கொழும்பு, தெஹிவளை டி.எஸ் ஜயசிங்க மைதானத்தில் நடைபெற்ற ஐ ப்ளஸ் (Eye Plus) அணிக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்களினால் கோல்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பாடிய ஐ ப்ளஸ் (Eye Plus) அணி 30 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதில் லஹிரு பண்டார, புசால் சாணுக்க ஆகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தலா 34, 31 ஓட்டங்களை பெற்றனர். ஆரம்ப இணைப்பாட்டம் 79 ஓட்டங்கள். பந்துவீச்சில் கோல்ட்ஸ் அணி சார்பாக செனுத் டின்சாரா 4 விக்கெட்ளையும், தருஷ ஜிம்கானா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி 20.2 ஓவர்களில் 6 விக்கெட்ளை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது. இதில ரிஷியுதன் 36 ஓட்டங்களையும், அஷேர் ரியான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

குழு D இல் மூன்று போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் மேலும் ஒரு போட்டி மீதமிருக்க காலிறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version