இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கு கடினமான இலக்கு

இங்கிலாந்தில் நடைபெற்று வரும், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இந்தியா அணி 608 ஓட்டங்கள் என்ற வெற்றிலைக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா அணியின் தலைவர் சுப்மன் கில்லின் அபார துடுப்பாட்டம் இந்தியா அணிக்கு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்காகியுள்ளது. முதல் இன்னிங்சில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்தார். தனித்து நின்று பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களோடு இணைந்து 269 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இரண்டாம் இன்னிங்சில் 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஒரு போட்டியில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியா அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 427 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும், ரிஷாப் பாண்ட் 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீசில் ஜோஷ் டங்க், சொஹைப் பசீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இந்தியா அணி 151 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் யஷாஸ்வி ஜய்ஸ்வால் 87 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 89 ஓட்டங்களையும் பெற்றனர். வொசிங்டன் சுந்தர் 42 ஓட்டங்கள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சொஹைப் பஷீர் 3 விக்கெட்களையும், க்றிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய வரும் இங்கிலாந்து அணி 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஹரி புரூக், ஜெமி ஸ்மித் ஆகியோர் நிலைமையை தலைகீழாக மாற்றினார்கள். 303 ஓட்டங்களை அதிரடியாக பெற்று இங்கிலாந்து அணியினை மீட்டு எடுத்தனர். இறுதியில் சகல விக்கெட்களையும் இழந்து 89.3 ஓவர்களில் 403 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது. ஹரி புரூக் 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஜெமி ஸ்மித் ஆட்டமிழக்கமால் 184 ஓட்டங்கள். ஜோ ரூட் 22 ஓட்டங்களை பெற்றார். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 6 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இன்று மீதமுள்ள ஓவர்கள் மற்றும் நாளைய தினத்துக்குள் இந்தியா அணி இங்கிலாந்து அணியின் சகல விக்கெட்களையும் கைப்பற்றினால் வெற்றி கிடைக்கும். இங்கிலாந்து அணி இந்த எண்ணிக்கையினை பெறுவது கடினம். பெற்றால் சாதனை வெற்றி. சமநிலை வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் போன்று இங்கிலாந்து அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாற வைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

Social Share

Leave a Reply