மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் மகேஷி சுரசிங்க விஜேரத்னவின் மகளை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் மகள் தனது தாயாருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஊடாக ஒரு மனுவை சமர்ப்பிக்க கடந்த 04 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். அதன்போது விசாரணை அதிகாரிகளைக் கொலை செய்வதாக மிரட்டியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக கெசல்வத்த காவல்துறையில் புகார் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைகுழு அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.