இலங்கை கடினமான இலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ்

SriLanka Vs Bangaladesh Second T20 Live from Rangairi international cricket stadium.

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் -நடைபெற்று வருகிறது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதலிரு விக்கெட்களையும் வேகமாக இழந்தது. 2 ஓவர்கள் நிறைவில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலை காணப்பட்டது. அதன் பின்னர் தௌஹித் ரிதோய், லிட்டோன் டாஸ் ஆகியோர் இணைந்து அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் 69 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்த நிலையில் தௌஹித் ரிதோய் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டத்தை உடைத்த பினுர பெர்னாண்டோ ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை கைப்பற்ற பங்களாதேஷ் அணியின் தடுமாற்றம் மீண்டும் உருவானது. ஆனாலும் அணியின் தலைவர் லிட்டோன் டாஸ் அடித்தாடி ஓட்டங்களை உயர்திக்கொடுத்தார். அவர் 76(50)ன் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

டாஸ் உடன் ஜோடி சேர்ந்த ஷமீம் ஹொசைன் சிறப்பாக துடுப்பாடினார். அவர் 48(27) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டாஸ்-ஹொசைன் ஜோடி 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த இலக்கை பெறுவதற்கு இலங்கை அணி போராட வேண்டும். இலகுவாக பெற முடியாது. இந்த மைதானத்தில் இந்த இலக்கை’பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்ளையும், நுவான் துசார 1 விக்கெட்டையும், மஹீஸ் தீக்ஷண 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

கண்டியில் நடைபெற்ற போட்டியில் இலகுவான வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ள நிலையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் இலங்கை தொடரை கைப்பற்றும்.

அணி விபரம்

இலங்கை அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. பங்களாதேஷ் அணியில் , மொஹமட் நைம் டஸ்கின் அஹமட், டன்ஷிம் ஹசன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, ஜேக்கர் அலி, முஸ்டபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ்

ரன்ஷிட் ஹசன், பர்வீஸ் ஹொசைன் எமோன், லிட்டோன் டாஸ், ஜேக்கர் அலி, தௌஹித் ரிதோய், மெஹதி ஹசன் மிராஸ், ஷமீம் ஹொசைன, மொஹமட் சைபுடின், ரிஷாட் ஹொசைன், முஸ்டபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்

இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், குஷல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, தஸூன் சாணக்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஷண, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார

பங்களாதேஷ்

டன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், லிட்டன் டாஸ் , நைம் ஷேக், தௌஹித் ரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தன்சிம் ஹசன், ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹமட், மொகமட் ஷைபுடீன்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version