இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 83 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதலிரு விக்கெட்களையும் வேகமாக இழந்தது. 2 ஓவர்கள் நிறைவில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலை காணப்பட்டது. அதன் பின்னர் தௌஹித் ரிதோய், லிட்டோன் டாஸ் ஆகியோர் இணைந்து அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் 69 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்த நிலையில் தௌஹித் ரிதோய் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டத்தை உடைத்த பினுர பெர்னாண்டோ ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை கைப்பற்ற பங்களாதேஷ் அணியின் தடுமாற்றம் மீண்டும் உருவானது. ஆனாலும் அணியின் தலைவர் லிட்டோன் டாஸ் அடித்தாடி ஓட்டங்களை உயர்திக்கொடுத்தார். அவர் 76(50)ன் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
டாஸ் உடன் ஜோடி சேர்ந்த ஷமீம் ஹொசைன் சிறப்பாக துடுப்பாடினார். அவர் 48(27) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டாஸ்-ஹொசைன் ஜோடி 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை 177 பெற்றுக்கொண்டது. இந்த இலக்கை பெறுவதற்கு இலங்கை அணி போராட வேண்டும். இலகுவாக பெற முடியாது. இந்த மைதானத்தில் இந்த இலக்கை’பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்ளையும், நுவான் துசார 1 விக்கெட்டையும், மஹீஸ் தீக்ஷண 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. பாத்ததும் நிஸ்ஸங்க ஒரு பக்கமாக ஆட்டமிழக்காமல் விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டார். 5.1 ஓவர்களில் 4 விக்கெட்கள் 30 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன் பின்னர் பத்தும் நிஸ்ஸங்க, தஸூன் சாணக்க ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியது. ஆனலும் அது தொடரவில்லை. 41 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. இலங்கை அணி சார்பாக பத்தும் நிஸ்ஸங்க 31 ஓட்டங்களையும், தஸூன் சாணக்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிஷாட் ஹொசைன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். சொறிபுல் இஸ்லாம், மொஹமட் ஷைபுடின் ஆகியோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி 16 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.