மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழ்நிலைக்கிடையில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான Amazon நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்களும், பஹ்ரைனில் அமைந்துள்ள ஒரு மையமும் இந்த தாக்குதலால் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வங்கி சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் கைப்பேசி செயலிகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நிலைமையை முன்னிட்டு, மத்திய கிழக்கில் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் தமது தரவுகளை ஐரோப்பா அல்லது அமெரிக்கா பகுதிகளுக்கு மாற்றுமாறு அமேசான் அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிராந்தியத்தின் டிஜிட்டல் நிலைத்தன்மை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.