மாவட்ட செயலக பெண்கள் மற்றும் பொலிஸ் பெண்களுக்கு இடையில் வலைப்பந்தாட்ட போட்டி!

கிளிநொச்சி மாவட்ட செயலக பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினருக்கும் கிளிநொச்சி பொலிஸ் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ வலைப்பந்தாட்டப் போட்டி வடமாகாண விளையாட்டு உள்ளக அரங்கில் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

இப் போட்டி இரு அணிகளுக்கிடையிலான நல்லுறவு, ஒற்றுமை மற்றும் விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்திருந்தனர்.
வேகமான, துல்லியமான பரிமாற்றங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு ஆட்டம் ஆகியவை போட்டியை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியிருந்தன.

இச் சினேகபூர்வமான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலக பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினர் ஒழுங்கான அணிச் செயல்பாடு மற்றும் சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம் வெற்றியைத் தமதாக்கிக் கொண்டதாக கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply