டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்துடன் முறைகேடாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (03.03) வைத்தியசாலைக்கு முன்பாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி உயிரிழந்த 23 வயதுடைய யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த சடலத்துக்கு மூன்று சிற்றூழியர்கள் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
வைத்தியசாலை நிர்வாகம் சி.சி.டி.வி. காட்சிகளை பரிசோதித்ததில், சம்பந்தப்பட்ட சிற்றூழியர்கள் அநாவசியமாக பிரேத அறைக்குள் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன என தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.