தரமற்ற நிலக்கரி காரணமாக மின்தடை அபாயம்!

நாட்டில் பயன்படுத்தப்படும் தரமற்ற நிலக்கரி காரணமாக மின்தடை ஏற்படும் அபாயம் இருப்பதாக பயன்பட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், குறிப்பாக ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார உற்பத்தி திறனில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், லக்விஜய மின் நிலையம் உள்ளிட்ட சில மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இரவு நேர உச்ச மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியில் அதிக சாம்பல் இருப்பதும் உபகரணங்கள் அதிக வெப்பமடையும் அபாயத்தையும் அதிகரிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version