இலங்கை கடல் எல்லை அருகில் இருந்த ஈரான் ‘IRIS Bushehr’ கப்பலிலிருந்த 204 பேரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணிக்குழுவினரிலிருந்து 204 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (05.02) வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள், குறித்த கப்பலையும் திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அந்த கப்பலில் மொத்தம் 208 பேர் கொண்ட பணிக்குழு இருப்பதாகவும், அவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.