ஈரான் மீது கடுமையான எச்சரிக்கை – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஈரான் நிலைதடுமாறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி இனி தாக்குதல் நடத்தமாட்டோம் என உறுதியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், மத்திய கிழக்கை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்ட ஈரான் தற்போது தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈரான் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Social Share

Leave a Reply