இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..
எனினும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ரத்தினபுரி, களுத்துறை, காலி , மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் காலை நேரத்தில் மேல், மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் சில பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படும்.