நேற்று (10.03) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.1,602 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் விலை 56 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.