டெல்லியில் தீ விபத்து – 400 குடிசை வீடுகள் முற்றிலும் நாசம்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 முதல் 400 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதியாலா கிராமத்தில் உள்ள மீன் சந்தையில் நேற்று (11.02) இரவு சுமார் 11:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

23 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் சில மணிநேரம் போராடிய பின்னர் இன்று (12.02) அதிகாலை 3:45 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் வணிகங்களையும் முற்றிலுமாக இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version