சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நேற்று நாட்டை விட்டு வெளியேறி, எதிர்வரும் 18ம் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ரூ. 1.69 பில்லியன் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து, அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 29ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version