இனி புதன்கிழமைகளில் விடுமுறை!

நாட்டு எரிபொருள் நிலைமை காரணமாக புதன்கிழமை அரசு விடுமுறை – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பு நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை நிலைமையை கருத்தில் கொண்டு, 2026 மார்ச் 18 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையாக அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளது என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து அரசுப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்களும் இதனைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், அரசின் அனைத்து நிகழ்வுகளும் மறுஅறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்படுகின்றன. இதற்கிடையில், புதன்கிழமையைத் தவிர்ந்த மற்ற நான்கு வேலை நாட்களில்,

அந்தந்த துறையின் தேவையைப் பொறுத்து, அரசு நிறுவனங்களின் தலைவர்கள் தேவையான பணியாளர்களை பணிக்கு அழைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version