இணையவழி வர்த்தகங்களுக்கு புதிய பதிவு முறைமை வேண்டும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இணையவழி வணிகங்களுக்கும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கும் பதிவு முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் ஆன்லைன் சந்தைப்படுத்தல் வேகமாக வளர்ந்து வருவதால் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் வலையமைப்புகள் உருவாகியுள்ளன என கூறினார். எனினும், சில சந்தர்ப்பங்களில் நுகர்வோருக்கு கிடைக்கும் பொருட்கள் எதிர்பார்த்த தரநிலைக்கு ஏற்ப இல்லாததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இணையவழி வர்த்தகம் விரிவடைந்து வரும் நிலையில், நுகர்வோர் தரமான பொருட்களைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம். தரமற்ற பொருட்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் சம்பவங்களை நாங்கள் கவனித்து வருகிறோம்,” என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, அனைத்து இணையவழி விற்பனையாளர்களும் கட்டாயமாக ஒரு அதிகாரப்பூர்வ பதிவு முறைமையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியதுடன், பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் கூரியர் சேவை வழங்குநர்களும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version