எயார்பஸ் ஒப்பந்த வழக்கு – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கியதாக கூறும் கபில!

பிரெஞ்சு எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு இன்று(19.03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்று முறை தலா ரூ. 20 மில்லியன் வீதம், மொத்தம் ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் ப்ரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொகைகள் ஒருமுறை பெலியட்டில் உள்ள இல்லத்திலும், இருமுறை தங்கல்லையில் உள்ள ‘கார்ல்டன்’ இல்லத்திலும் வழங்கப்பட்டதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version