நாட்டில் நெருக்கடி இல்லை என்றும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்க தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டாலும், தற்போது நுரச்சோலை மின்நிலையத்தை மையமாகக் கொண்டு கடுமையான தேசிய நெருக்கடி ஒன்று நிலவிவருகின்றது. 12 ஆம் திகதி 51 மெகாவோட், 13 ஆம் திகதி 130 மெகாவோட், 14 ஆம் திகதி 135 மெகாவோட், 15 ஆம் திகதி 132 மெகாவோட், 16 ஆம் திகதி 148 மெகாவோட், மற்றும் நேற்று 176 மெகாவோட் என்ற அளவில் மின் உற்பத்தி குறைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிலக்கரி பயன்பாட்டில் ஏற்பட்ட சிக்கல் யுத்தத்தால் ஏற்பட்டதல்ல என்றும், தற்போது பறக்கும் சாம்பல் மற்றும் படிந்த சாம்பல் அதிகளவில் உற்பத்தியாவதால் சாம்பலை முகாமைத்துவம் செய்யும் உபகரணங்களில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனால் மின் உற்பத்தி குறைந்து சாம்பல் அளவு அதிகரித்துள்ளன. இதன் மூலம் நிலவும் நெருக்கடி தெளிவாகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தில் சீமெந்து நிறுவனங்கள் மூடப்படுவதால் இந்த சாம்பலை அகற்றுவதில் பிரச்சினை காணப்படுகின்றன. இதனால் சாம்பலை சாம்பல் மேட்டிற்கு அனுப்ப வேண்டி காணப்படுகின்றன. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் பேரிடர் கூட உருவாகலாம். அது உடல்நலத்தை பாதிப்புக்கும் காரணமாகவும் அமையலாம். முதியோர், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், சுவாச நோயாளிகள் ஆகியோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். இது விவசாயத்தின் உற்பத்தித்திறனையும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19.03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்ச்சியான மின் விநியோகத்தையும் பாதிக்கும். மத்திய கிழக்கு யுத்தத்தால் இது மேலும் அதிகரிக்கலாம். இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பிரகாரம், ஏப்ரல், ஜூன், ஜூலை மாதங்களில் மின்நிலைய பராமரிப்பு காரணமாக மின் வெட்டு கூட ஏற்படலாம். தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் கடுமையான பல பிரச்சினைகள் எழுந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகள், மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. QR முறை இன்னும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. தொழிற்சாலைகளில் தேவையான அளவை விட எண்ணெய் பயன்பாட்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளன. தரம் குறைந்த நிலக்கரியால் தேவையான மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய டீசலை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நிலக்கரி நெருக்கடியால் உருவாகும் அதிக செலவீனத்தை அதிக மின்சார கட்டணம் மூலம் மக்கள் மீது சுமத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு என்ன நேரும் என்பதை ஊகிக்கவே முடியாது. அரசாங்கம் இவர்களுக்கு என்ன பதில் அளிக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். திறைசேரியில் மேலதிகமாக காணப்படும், நிரம்பி வழியும் பணத்தில் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுங்கள். உலகின் பிற நாடுகள் அவ்வாறு செய்தாலும் நமது நாட்டில் இன்னும் அது நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-