கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து – 66 பேர் பலி!

தென் கொலம்பியாவில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

Putumayo மாகாணத்தின் Puerto Leguízamo பகுதியில் இருந்து புறப்பட்ட Lockheed C-130H Hercules விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் மொத்தம் 125 பேர் பயணித்திருந்தனர்.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். காடு பகுதியானதால் மீட்பு பணிகள் சிரமமாக நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்டபட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version