போரைக் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், தெற்கு லெபனானில் வசிக்கும் பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா, ஈரானுக்கு 15 அம்சங்களை கொண்ட திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தத் திட்டத்தில், ஈரானின் அணு திட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தல் மற்றும் Strait of Hormuz மீண்டும் திறக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இத்தகைய ஆவணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை, போர் தொடங்கியதிலிருந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் சுமார் 82,000 இடங்கள் சேதமடைந்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.