இந்தியாவைச் சேர்ந்த ”ஹரி ஆனந்த்” என்ற எண்ணெய் கப்பல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.03) கொழும்பு துறைமுகத்தின் Dolphin Jetty துறையில் நங்கூரமிட்டது.
இந்தக் கப்பல் மூலம் மொத்தம் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 18,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோலும் அடங்கும். இந்த எரிபொருள் கையிருப்புகள் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியத்துக்கு மாற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த எரிபொருள் வரவு, நாட்டின் எரிபொருள் விநியோக நிலைத்தன்மைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.