கஹாவத்த பகுதியில் காணாமல் போன ரத்தின வர்த்தகரின் உடல், நீலகம பகுதியில் உள்ள குழியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளின் தந்தையான 61 வயதுடைய இவர், கஹாவத்த கத்தாங்கே பகுதியைச் சேர்ந்தவர், கஹாவத்த – நீலகம வீதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (28.03) பிற்பகலில் இவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர், அதே வீதியின் ஒரு வளைவு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஞாயிற்றுக்கிழமை (29.03) அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் அவரது கைப்பேசியும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.