இத்தாலி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ண வாய்ப்பை தவறவிட்டது. 48 அணிகளும் உறுதி செய்யப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான FIFA காற்பந்தாட்ட உலககிண்ணத்திற்கு 48 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த உலககிண்ணம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஜூன் 11 தொடக்கம் ஜூலை 19 ஆம் திகதி வரை 16 நகரங்களில் நடைபெறவுள்ளன. இன்று காலையில் நடைபெற்ற தெரிவுகாண் போட்டிகளில் 6 அணிகள் தெரிவு செய்யப்பட்டன. பொஸ்னியா, ஸ்வீடன், செக் குடியரசு, துருக்கி ஆகிய அணிகள் ஐரோப்பா கண்டத்திலிருந்து ஈராக், கொங்கோ ஆகிய அணிகள் கண்டங்களுக்கிடையிலான தெரிவுகாண் போட்டியிலிருந்து தெரிவாகின.

ஐரோப்பா கண்ட தெரிவுகாண் போட்டிகளின் குழு A இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் பொஸ்னியா அணிகள் மோதின. இந்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பெனால்டி உதையில் பொஸ்னியா அணி 4-1 என்று வெற்றி பெற்றது.

ஐரோப்பா கண்ட தெரிவுகாண் போட்டிகளின் குழு B இறுதிப்போட்டியில் ஸ்வீடன் மற்றும் போலந்து அணிகள் மோதின இந்த போட்டியில் ஸ்வீடன் அணி 3-2 என்று வெற்றி பெற்றது.

ஐரோப்பா கண்ட தெரிவுகாண் போட்டிகளின் குழு C இறுதிப்போட்டியில் கொசோவோ மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துருக்கி அணி 0-1 என்று வெற்றி பெற்றது.

ஐரோப்பா கண்ட தெரிவுகாண் போட்டிகளின் குழு D இறுதிப்போட்டியில் செக் குடியரசு மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இந்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பெனால்டி உதையில் செக் குடியரசு அணி 3-1 என்று வெற்றி பெற்றது.

கண்டங்களுக்கிடையிலான தெரிவுகாண் போட்டிகளின் குழு A இறுதிப்போட்டியில் கொங்கோ மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொங்கோ அணி 1-0 என்று வெற்றி பெற்றது.

கண்டங்களுக்கிடையிலான தெரிவுகாண் போட்டிகளின் குழு B இறுதிப்போட்டியில் ஈராக் மற்றும் பொலிவியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈராக் அணி 2-1 என்று வெற்றி பெற்றது.

ஐரோப்பா கண்டத்திலிருந்து தெரிவாகிய அணிகள் :- அவுஸ்திரியா, பெல்ஜியம், பொஸ்னியா, க்ரேஷியா, செக் குடியரசு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே, போர்த்துகல், ஸ்வீடன், ஸ்பெயின், ஸ்கொட்லாந்து, சுவிட்ஸர்லாந்து, துருக்கி.

ஆசிய கண்டம் :- அவுஸ்திரேலியா, ஈரான், ஈராக், ஜப்பான், ஜோர்டான்(அறிமுகம்), கத்தார், சவுதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்(அறிமுகம்).

ஆபிரிக்க கண்டம் :- அல்ஜீரியா, கேப் வேர்ட்(அறிமுகம்), கொங்கோ, எகிப்து, கானா, ஐவொரி கோஸ்ட், செனகல், மொரோக்கோ, தென் ஆபிரிக்கா, துனிசியா

அவுஸ்திரேலியா கண்டம் :- நியூ சீலாந்து

வட அமெரிக்கா கண்டம் :- அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஹைடி, பனாமா, குரகாஓ,

தென் அமெரிக்கா கண்டம் :- அர்ஜென்டீனா, பிரேசில், எகுவடர், பரகுவே, உருகுவே

வீடியோ காணொளி

Social Share

Leave a Reply