ஹோமாகம பகுதியில் 12 மணி நேர நீர் விநியோக தடை!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (07.04) ஹோமாகம பிரிவு 02 பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹோமாகம நகரம், வேகந்த , பிங்கேதா வீதி, வளவ்வ வீதி, கெமுனு மாவத்தா, அதுருகிரியா வீதி, கலவிலவத்த, நியந்தகல, மகம்மான, மககடுவான, தெனியா மற்றும் தியகம பல்கலைக்கழகப் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்த நீர் விநியோகத் தடை இன்று காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply