இலங்கை கிரிக்கெட்டை மீள கட்டியெழுப்ப காலம் எடுக்கும் – விளையாட்டுதுறை அமைச்சர்?

இலங்கையின் கிரிக்கெட் தரத்தை மீண்டும் உயர்த்துவது காலம் எடுக்கும் ஒரு செயல்முறையாகும்; இதற்குத் நீண்டகால திட்டமிடல் அவசியம் என விளையாட்டுதுறை அமைச்சர் சுனில் குமார கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உட்பட விளையாட்டு துறையின் வீழ்ச்சி கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொடர்ந்துவருகிறது என்றும், அதை குறுகிய காலத்தில் மாற்ற முடியாது என்றும் கூறிய அவர்,
“ஒரு விளையாட்டை மேம்படுத்துவதும், திறமையான வீரர்களை உருவாக்குவதும் நேரம் எடுத்துக்கொள்ளும். அதை ஒரு கட்டிடத்தை கட்டுவது போல விரைவாக செய்ய முடியாது,” என்று தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை அரசு ஏற்கனவே உருவாக்கி, அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

“இலங்கை கிரிக்கெட்டை அதன் பழைய நிலைக்கு நிச்சயமாக மீண்டும் கொண்டு வருவோம். அதைப்பற்றி எந்த சந்தேகமும் தேவையில்லை,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

T20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி இரண்டாம் சுற்றோடு வெளியேறிய பின்னர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற ICC உடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக தெரிவித்திருந்தார். தற்போது இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version