போர் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் – மகிழ்ந்து கொண்டாடும் ஈரான் மக்கள்!

ஈரான் தலைநகர் தெஹெரான் இன்று கொண்டாட்டக் களமாக மாறியது. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இடையில் இரண்டு வார இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தெருக்களில் கூடிச் சந்தோஷமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இடைநிறுத்தம், கடந்த பிப்ரவரி 28ம் திகதி போர் ஆரம்பமானதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட முதல் பெரிய இடைவேளையாகும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதால், இரு தரப்பினரும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதன் பின்னர் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து, நீண்ட நாட்களாக தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், இது நிரந்தர அமைதிக்கான தீர்வு அல்ல என்றும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version