பேரூத் நகரில் இஸ்ரேல் வான்தாக்குதல்- 250க்கும் மேற்பட்டோர் பலி!

லெபனானின் மத்திய பகுதியிலுள்ள பேரூத் நகரில் உள்ள நெரிசலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் திடீர் வான்தாக்குதல்களை மேற்கொண்டது. எந்த முன் எச்சரிக்கையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போருக்கு இடைக்கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் குறைந்தது 254 பேர் உயிரிழந்ததுடன், 1,165க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என லெபனானின் சிவில் பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கியதால் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version