புதுவருடகாலத்தில் அதிகரித்த விபத்துகள் – பொலிஸாரின் கோரிக்கை!

ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நடந்த விபத்துக்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கால பகுதியில், வீதி விபத்துக்களில் 53 பேரும், நீரில் மூழ்கி 27 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version