இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவிற்கு விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (20.04) காலை நுவரெலியா நகரத்திற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை பார்வையிட்டார்.

‘X’ சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், “இன்று இலங்கையின் நுவரெலியா வந்ததில் மகிழ்ச்சி. இந்திய வம்சாவளி தமிழர் சமூகத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டப் பகுதிகளைப் பார்வையிட வந்துள்ளேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த விஜயம் அவரது இருநாள் உத்தியோகபூர்வ இலங்கை பயணத்தின் ஒரு பகுதியாகும்.

நேற்று (19.04), சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தியிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version