ரிங்குவின் அதிரடியால் முதல் வெற்றியை பெற்றது கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (19.04) மதியம் IPL இன் 28 ஆவது போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்று இந்த தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. இதில் வைபவ் சூர்யவன்ஷி 46(28) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 39(29) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சுனில் நரைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறியது. ரிங்கு சிங் 8 ஓட்டங்களில் இருக்கும் பொழுது அவரின் பிடி நழுவவிடப்பட்டது. இறுதியில் ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ரோய் ஆகியோர் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 53(34) ஓட்டங்களையும், அனுகுல் ரோய் ஆட்டமிழக்காமல் 29(16) ஓட்டங்களையும், கமரூன் க்ரீன் 27(13) ஓட்டங்களையும், ரோவ்மன் பவல் 23(20) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும், ஜொப்ரா ஆர்ச்சர், நன்றே பேர்கர், ரவி பிஷ்ணோய், யாஷ்ராஜ் புஞ்சா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version