”போர்நிறுத்தம் நீடிக்கப்படுகிறது” – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமலில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தலைமை அதிகாரி அசீம் முனீர் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோரின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் “கடுமையாக பிளவுபட்ட நிலையில் உள்ளது” என்பதால், அதன் தலைவர்கள் ஒருமித்த முன்மொழிவை முன்வைக்க கூடுதல் நேரம் தேவையாக உள்ளது என அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா தொடர்ந்து தடை நடவடிக்கைகளைப் பேணுவதோடு, இராணுவத்தை தயார்நிலையிலும் வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் பிரதிநிதிகள் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்து, பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை இந்த போர்நிறுத்தம் தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version